தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றிபெற எல்லா கட்சிகளும், வேட்பாளர் அறிவித்து பிரச்சாரம் என்று தங்களது தேர்தல் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கல்லூரி கடைசி செமஸ்டரை தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்த மாணவர்கள் , தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் ஆல் பாஸ் என எடப்பாடி அரசு அறிவித்தது.இதனால் பாஸ் செய்ய முடியாமல் கஷ்டப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இதற்கு அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசுக்கு நன்றி தெரிவித்து, “எங்க ஓட்டு அதிமுக எடப்பாடியாருக்கே” என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
நாகை நகரில் ஒரு வீதிகளில் கடும் வெயிலில் எடப்பாடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் மிக பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. எடப்பாடி பழனிசாமி சத்தம் வந்த திசையை நோக்கி எட்டி பார்த்தார்.

அங்கே 16 க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பதாகைகளில் ‘எடப்பாடியார்’ என்று மேல் வரிசையில் நின்ற மாணவர்கள் எழுதி வைத்திருந்தனர். அடுத்த வரிசையில் நின்ற இளைஞர்கள் ‘அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே’ என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.

இதை பார்த்து மனம் நெகிழ்ந்த பழனிச்சாமி வாய் விட்டு சிரித்தார். அரியர் அச்சத்தில் இருந்த மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வருக்கு இளைஞர்கள் இப்படி வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்.

By ADMIN