ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10வது அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 20 முதல் 28 வரை ஆகும். கான்ஸ்டபிள் பதவிக்கு 18 முதல் 28 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வானால் சப் இன்ஸ்பெக்டருக்கு ரூ.35,400-ம், கான்ஸ்டபிளுக்கு ரூ.21,700-ம் சம்பளமாக வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு ஆன்லைன் தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு என்று மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.500-ம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள RRB இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: https://rpf.indianrailways.gov.in/RPF/PDF/Upcoming.pdf