சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Part Time Sweeper பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 30.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

கலெக்டர் ஆபீஸ் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Part Time Sweeper பணிக்கென 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆபீஸ் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆபீஸ் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கலெக்டர் ஆபீஸ் ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
சிவகங்கை.

By ADMIN