நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த காலத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. காஜல் இப்படி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டதால் அவரை இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் ஏற்கனவே படத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தான் கிரேன் விபத்து ஏற்பட்டது. அதில் அவர் சில நொடி வித்தியாசத்தில் தப்பினார் என்றும் சொல்லப்பட்டது.
விபத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டு இருந்த ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. ஷங்கர் RC15 தெலுங்கு படத்தை முடித்தபின் இந்தியன் 2 ஷூட்டிங்கை மீண்டும் கையில் எடுக்க இருக்கிறார். அதில் காஜல் அகர்வாலுக்கு பதில் தீபிகா படுகோன் அல்லது கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.
காஜல் இந்த படத்தில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பேசப்பட்ட சம்பளம் பல கோடி ரூபாயை இழந்திருக்கிறார்.