சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது. சில நாடுளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அளிக்க பிளாஸ்டிக்கையே உணவாக உட்கொள்ளும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், ஜோபோபாஸ் மோரியோ (Zophobas morio) என்ற புழுக்களை மூன்று குழுக்களாக பிரித்து அவற்றுக்கு மூன்று வார காலத்திற்கு வெவ்வேறு விதமான உணவுகளை வழங்கிவந்தனர்.
இதில், பாலிஸ்டீரைனை உண்ட புழுக்களுக்கு எடை அதிகரித்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாலிஸ்டீரைன் மற்றும் ஸ்டீரைனை அழிக்கக்கூடிய நொதி இப்புழுக்களின் குடலில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இந்த வகையான புழுக்களை அதிகளவில் உருவாக்குவது கடினம் என்றாலும் இவற்றின் குடலில் சுரக்கும் நொதியை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் இருக்கும் பாக்டீரியா மூலமாக பிளாஸ்டிக் மறுசுழற்சியை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள்.