1.ஆலிவ் எண்ணெயில் சில துளி லாவெண்டர் எண்னெய் கலந்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். இது அற்புதமான ரிசல்ட்டை தரும். விரைவில் வெடிப்பிலிருந்து குணம் பெறுவீர்கள்.
2.தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அதே அளவு பால கலந்து பாதத்தில் தடவவும். மறு நாள் காலையில் கழுவுங்கள். இது பாதங்களை மிருதுவாக்கும். சொரசொரப்புத்தன்மையை நீக்கும்.
3.ஓட்ஸுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். ஓட்ஸை பொடி செய்து அவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த குறிப்பு இன்னும் வேகமாக பலனைத் தரும்.
4.பாதம் மூழ்கும் அளவிற்கு நீரை வெதுவெதுப்பக எடுத்துக் கொண்டு அதில் ஆப்பிள் சைடர் வினிகரை 1 மூடி கலந்து பாதங்களை 10 நிமிடம் ஊற வைகக்வும். வாரம் 3 நாட்கள் செய்தால் வெடிப்பு மறையும். தவிர பாத வெடிப்பு வருவதை தடுக்கலாம்.
5.வாழைப்பழத்தை நன்றாக மசித்து வெடிப்பின் மேல் தேயுங்கள். சில நிமிடங்களில் கழுவுங்கள். இவை ஒரே வாரத்தில் பாத வெடிப்பை மறையச் செய்து மிருதுவான பாதத்தை தரும்.