கொரோனா பயம் காரணமாக தமிழகம், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு .
நம் இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இப்ப மீண்டும் மேலோங்க தொடங்கியுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம் காட்டுவதால் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோன தொற்று பாதிப்பு அதிகம் தெறித்தது, இதனால் , கொரோனா தடுப்பு வேலைகளில் அனைத்து மாநில அரசுகளும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 வகுப்பு மாணவர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது .

By ADMIN