விமர்சகராகவும் யூடியூடிப் பிரபலமாகவும் தற்போது இருந்து கொண்டு திரைப்பட கலைஞர்களின் அந்தரங்க விசயங்களை பேசிக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன்.

தன்னிடம் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டேன் என்று அடித்து கூறும் பயில்வான், உங்களின் அந்தரங்க விசயத்தை ஏன் நடுரோட்டிற்கு கொண்டு வந்து காட்டுகிறீர்கள். பணத்திற்காக ஏன் கேவளமாக ஆடையணிந்து நடிக்கிறீர்கள் என்றும் நடிகைகளை கண்டபடி பேசி வம்புக்கு இழுத்துள்ளார்.

யாருடைய படுக்கையறையையும் எடிப்ப்பார்க்கவில்லை. பெட்ரூம் திறந்திருந்தால் அதை நான் பார்க்கத்தான் செய்வேன் என்று திமிருடன் பேசியுள்ளார். இப்படியான குடும்ப குத்துவிளக்கு நடிகைகளை மட்டும் பேசுவது கிடையாது. ஏனென்றால் அவர்கள் க்ளாமராகவோ, ஆபாசமாகவோ நடிப்பது கிடையாது.

பணத்திற்காக எதையும் காட்ட தயாராக இருக்கும் நடிகைகளை பற்றி தான் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயருடன் கடற்கரை சாலை நடுரோட்டில் சண்டை போட்டார்.

அதற்கு காரணம் அப்படத்தில் ரேகா நாயர் அரைநிர்வாணத்தில் நடித்தார் என்று கேவலமாக பயில்வான் பேசியிருந்தார். அதனை எதிர்த்து தான் ரேகா நாயர் அப்படி நடந்து கொண்டுள்ளார். இதையெல்லாம் கண்டுகொள்ளாத பயில்வான் யூடியூப்பில் தன் பங்கிற்கு விமர்சித்து தான் வருகிறார்.

By ADMIN