பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி புழல் சிறைக்கு சென்று, ஜெயக்குமாரை நேரில் சந்தித்தார்.
அநேகமாக ஜெயக்குமாரை விடுவிக்க கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது.. செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ரவுடிகளையும் குண்டர்களையும் தேர்தலில் கைது செய்யாமல் அவர்களை ஏவியதால் இதுபோன்ற பிரச்சனைகள் நிலவி வருகின்றன..
கட்சிக்குள் மேலும் புகைச்சல் கிளம்பி உள்ளது.. அந்த புகைச்சல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது..
எடப்பாடியும் வேலுமணியும் புழல் சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறார்கள்… அப்படியே ஷாக் ஆனதுடன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கட்சி தலைமையகத்துக்கு அருகே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில், மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அடுத்து வேறு நிகழ்ச்சி இருக்கா?” என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடியோ, “எனக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லைண்ணே.. நேரா வீட்டுக்குத்தான் போறேன். உங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சி இருக்கா?” என்று கேட்க, “எனக்கு ஒன்றுமில்லை. நானும் வீட்டுக்குத்தான் போறேன்” என்று சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்.
எடப்பாடியோ வீடடுக்கு வராமல், ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்தார்… இந்த தகவலை அறிந்துதான் கோபப்பட்டார் ஓபிஎஸ். தம்மிடம் எடப்பாடி பொய் செல்லியிருக்கிறாரே என்ற கோபம்… அதனால் தான் அந்த டென்சன்” என்று கோபத்துக்கான காரணத்தை நம்மிடம் சொன்னார்கள்.
“எடப்பாடியை எவ்வளவோ நம்பினேன்… ஆனா, நம்பினவங்களுக்கு துரோகம் செய்றதே அவரோட வேலையா வெச்சிருக்காரு…