இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். ஆனால் இந்தப் போட்டியை கொண்டாட
பிசிசிஐ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோலியின் 100வது டெஸ்ட்க்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விராட் கோலிக்கும், கங்குலிக்கும் ஏற்கனவே கேப்டன்ஷி விவகாரத்தில் மோதல் நிலவியதால், பிசிசிஐ பழிவாங்குவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டிய்ளளனர்.
சந்திகார் என்பது சிறிய நகரம், அங்கு தினசரி 30, 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது வீரர்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டை தரும்
என்பதால் தான் பார்வையாளர்களுக்கு அனுமதி தரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, 100வது டெஸ்ட்டையொட்டி கோலியை கேப்டன் பொறுப்பை ஏற்க பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அவர் நிராகாரித்து விட்டதாக
தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.