விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதில்லை என கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதில் யார் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சிம்புவின் என்ட்ரி எப்படி இருக்கப்போகிறது? போட்டியாளர்களை எப்படி வெளுத்து வாங்கப்போகிறார்? என்பதை காணவும் வெறித்தனமான
வெயிட்டிங்கில் உள்ளனர்.

சிம்பு முதன் முறையாக தொகுத்து வழங்க உள்ள நிகழ்ச்சியில் இருந்து யாரை வெளியே அனுப்ப போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

By ADMIN