தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால்
அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போது இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும்,
தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன்,
வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினார்.

கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை
பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என, தூத்துக்குடியில் செய்தியாளர்களை
சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

By ADMIN