ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் வெள்ளையன் மற்றும் முருகேசன் மது போதையில் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை போலீசார் மிக கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அவருக்கு தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில்,

போலீசார் தாக்கியதில் காயமடைந்த வாழப்பாடி மளிகைக்கடை வியாபாரி முருகேசன் என்பவர், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீஸ் சோதனையின்போது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரிக்கும்போது போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லாததால், அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தருமபுரிக்கு சென்று மதுப்பாட்டில்கள் வாங்கிவந்தனர். இது தொடர்பான சோதனையின் போது தான் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியது தெரியவந்துள்ளது.

தற்போது அவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

.

By ADMIN