பல குரங்குகளுக்கு சாப்பாடு அளித்த ராமலிங்கம் என்பவர் உயிரிழந்தநிலையில் அவர் இறந்து தெரியாமல் அந்த குரங்குகள் அவரை தேடிவந்து கூச்சலிட்டு கூப்பிட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் பகுதியை அடுத்து உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் தான் ராமலிங்கம் . இவர் கடந்த 7 வருடமாக தனது வீட்டிற்கு பின்னால் இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து வரும் குரங்குகளுக்கு தினமும் சாப்பாடு , பழம், நீர் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார். இதனால் குரங்குகள் ராமலிங்கத்துடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளன.

அந்த குரங்குகள் அவர் தோளிலும், மடியிலும் ஏறி குரங்குகள் விளையாடவும் செய்துள்ளன. இப்படி தினமும் குரங்குகளை கவனித்துவந்த ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

ராமலிங்கம் உயிரிழந்தது தெரியாமல் நேற்று காலை அவரை தேடி வந்த குரங்குகள் கூட்டம் அவர் இன்னும் வரவில்லை என மரங்களின் மீது ஏறி கூச்சலிட்டு வருகின்றது.

நாம் சக மனிதர்களிடமே அன்பு காட்டாத பலர் இருக்கையில், குரங்குகள் மீது அன்பு காட்டி, அவற்றை கவனித்துவந்த ராமலிங்கம் உயிரிழந்தது அந்த குரங்குகளுக்கு மட்டுமில்லாமல், இந்த மனித குலத்திற்கே ஒரு பெரிய இழப்புதான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

By ADMIN