இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவரும் நிலையில், 3-வது அலை விரைவில் வரும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா 3-வது அலை சின்ன குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது . இந்த நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது. 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில் குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. எனவே குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

By ADMIN