யூடுபே பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அது வெடிக்கும் காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்ட இரண்டு சிறுவர்கள் பொலிஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்தைத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் ஹரிபாலாஜி.
இவர் இதற்கு முன் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தார்
அப்போது அங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்சந்த்குமார் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு செய்வது பற்றி தெரிந்து கொண்டான்
மே 13ஆம் தேதி கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் சாலையில் யூடியுப் பை பார்த்து தயாரித்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
அதனை அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் (வயது 17) வீடியோ எடுத்து நேற்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாச்சியார்கோவில் காவல்நிலையத்தார் வெடி குண்டு தயாரித்த ஹரி பாலாஜி மற்றும் அதனை வீடியோ எடுத்த அவனது நண்பன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விருவரும் 17 வயது சிறுவர்கள் என்பதால் அவர்களது புகைப்படங்களை தர காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.