அரியலூர் மாவட்டம் தாபழூர் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சில நாட்களுக்குமுன் முன்பு டாஸ்மாக்கில் மது வாங்கி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
போகிற வழில பாதி மதுவை அவர் குடித்துள்ளார். மேலும் மீதியை மதுவை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
வீட்டில் டம்ளர் ஒன்றை எடுத்து குடிப்பதற்காக மதுவை ஊற்றியுள்ளார். அப்பொழுது அந்தப் பாட்டிலுக்குள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உடனே இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அலறிய குடும்பத்தினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த செய்தி பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.