மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தது.
பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் அபாரமான பந்து வீச்சால் 43 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 137 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டியது இந்தியா. இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.