இன்ஸ்டகிராமில் 200 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகிறார் முன்னாள் கேப்டன் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. களத்தில் கோலி அரை சதம் அடித்தாலே அது கட்டாயம் 100 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். அவரை ரன் மிஷின் என்று அழைக்கும் அளவிற்கு ரன்களை வாரிகுவிப்பார். இப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களைக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு, அந்த பந்தம் சமூக வலைதளங்களிலிலும் தொடர்ந்திருக்கிறது.
அதாவது இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்தியாவிலேயே அதிகளவிலான ஃபாலோவர்ஸ்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்கிற மற்றொரு பெருமையை விராட் பெற்றிருக்கிறார். ஆம் விராட் கோலி , இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் உலக அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அத்துடன் தனக்கு 200 மில்லியன் ஃபாலோவர்கள் வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விராட் கோலி ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். . அந்த வீடியோவை ரசிகர்கள் வேகமாக வைரலாக்கி வருகின்றனர். கால்பந்து ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ ( 451 மில்லியன் ) மற்றும் லியோனல் மெஸ்ஸி ( 334 மில்லியன்) ஆகியோருக்கு அடுத்தப் படியாக அதிக பாலோவர்களை கொண்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இணைந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.