இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடந்த T20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மிக பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து t20 புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடம் வகித்தது ,
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ முன்னதாக அறிவித்திருந்தது.
இதனை ரசிகர்கள் இது விராட் கோலிக்கு எதிரான சதிச் செயல் என கூறினார் . மேலும் கவாஸ்கரும், 100வது டெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான தருணம். ரசிகர்களை அனுமதித்து, அதனை மிக பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என கூறினார்
தற்போது பிசிசிஐ 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது .
India vs Sri Lanka 1st Test Match 2022