அ.தி.மு.க சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.கவின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது.
ஜெயலலிதாவுக்கு செய்த பாவமும் சசிகலாவுக்கு செய்த துரோகமும் உங்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்.
அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான். அ.தி.மு.க தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும் கூட.
ஆனால், மக்கள் நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அ.தி.மு.க கொடுத்துள்ளார்கள். இது தொடக்கம்தான்.
இன்னும் பல்வேறு விளைவுகளையும், தோல்விகளையும் அ.தி.மு.க எதிர்காலத்தில் சந்தித்துக்கும் என்று அ.தி.மு.கவின் தோல்வி குறித்து கருணாஸ் தெரிவித்துள்ளார்.