தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகராட்சி 19-வது வார்டில் சுகுணா என்பவர் அதிமுக சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் இவர் 215 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாகராஜன் தனது மனைவி தோல்வியடைந்ததில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By ADMIN