குடும்ப தலைவிகளுக்கு ஒரு நற்செய்தி ! ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் 18 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகுமாம் …
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது.
சென்னை – செய்தியாளர்களுக்கு தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் தமிழக சட்ட சபையின் கூட்டம் வருகிற 18 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆண்டு நிதி நிலை அறிக்கையை அதாவது 2022 -2023 ஆம் ஆண்டுக்கான (பட்ஜெட் ) நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கடைசி ஆண்டு போலவே காகிதமின்றி கணினி தொடும் திரையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது. பட்ஜெட் மீது எவ்வளவு நாட்கள் விவாதம் நடத்தப்படும் மற்றும் வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்யப்படும் என்ற விவரம் ஆய்வு கூடத்திற்கு பின்பு தெரியவரும்.
அதன்பின் 2022 – 2023 ஆண்டுக்கான முன்பான மானிய கோரிக்கையும், இறுதி துணை நிதி நிலை அறிக்கையும் சட்டசபையில் நிதித்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு துரையின் மானிய கோரிக்கைகள் பற்றிய விவரம் ஆய்வு குழுவின் பின்னர் தெரியவரும். நீட் தேர்வு விளக்கு கோரும் சட்ட மசோதா முன்னரே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது, அங்கிருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள விவரம் விசாரிக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சி வழக்கம் போல கேள்வி பதில் நிகழ்வு அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். என்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் தி மு க வாக்குறுதி அதாவது குடும்ப தலைவிக்கு
ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் முறைப்படுத்த படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்குறுதி கடந்த நகர்ப்புற தேர்தலில் பிரச்சாரத்தின்புது பெண்களுக்கு நிச்சயம் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிய இருந்தது குறிப்பிடத்தக்கது.