திமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மருத்துவர் சரவணன் விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த சரவணன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஏற்கெனவே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சரவணன் எம்.எல்.ஏவும் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

By venkat