ஊர்த்து போய் முதல்வராக நான் பல்லியா? பாம்பா?
நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன் என தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டவர் ஸ்டாலின். ஆனால், அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல், நாடகம் போடுகிறார். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு. கருணாநிதி மகன் என்பதை தாண்டி, ஸ்டாலினுக்கென்று தனி அடையாளம் உண்டா? நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன்.
பொய் செய்திகளை பரப்பி மக்களை குழப்ப ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், மக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.