நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் தளபதி 65 படத்தை பற்றி தினமும் பல தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது. விஜய் நடிக்கும் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தளபதி 65 படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
ஆனால் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தூள்கிளப்பிய வித்யூத் ஜம்வால் தான் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று சிலர் இணையதளத்தில் வதந்தியை பரப்பியுள்ளனர்.
இதையறிந்த வித்யூத் ஜம்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் , “தளபதி 65 படத்தின் வில்லன் யாரென்று தெரியவில்லை , ஆனால் அந்த படத்தில் நான் வில்லனாக நடித்து இருந்தால் நல்லா இருந்துருக்கும். மேலும் விஜய்யுடன் வில்லனாக இணைய ஆசைப்படுகிறேன், ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.