தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் , ரெமோ படங்களில் நடித்து பிரபபலமடைந்தார். பின்னர் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் “மகாநதி” என்ற படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

இவர் நடிப்பில் பிரபலமடைந்த அளவில் பலருடன் சேர்த்துவைத்து கிசுகிசுக்க பட்டார். முதலில் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து பேசப்பட்டார். அவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார்.

பின்பு கேரளா தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற தகவல் வெளிவந்தது. அதுவும் வதந்தி என்று தெரிவித்தனர். தற்போது இது போன்று பல நபர்களுடன் இணைத்து பேசி வந்த நிலையில் “எனக்கு தற்போது திருமணம் ஆசை இல்லை . நான் சினிமாவில் இன்னும் பல வருடங்கள் நடிக ஆசைப்படுகிறேன்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

By sowmiya