நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிக மோசமான படுதோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்ததே கிடையாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இரட்டை தலைமை இருந்தும்.. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைகள் இருந்தும் கூட இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது.
அதிமுக தனித்து நின்றும் தோல்வி அடைந்து இருக்கிறது.
தோல்வியை அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி, இந்தளவுக்கு மோசமான தோல்வியை சந்திக்கிறதென்றால் காரணம் தலைமை சரியில்லை என்று நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனராம். இதை பற்றிய கோபமாக புகார் தலைமைக்கும் சென்று இருக்கிறதாம்.
தலைமை சரியாக இருந்தால் இப்படி நடந்து இருக்காது. இனியும் இரட்டையர்களை நம்புவது சரியாக இருக்காது என்று கட்சிக்குள் இருக்கும் டாப் தலைகள் சந்தேக வார்த்தைகளை வீசி இருக்கிறார்களாம்.
ஒற்றை தலைமைதான் அதிமுகவை காப்பாற்றும் என்று மூத்த தலைவர்களிடம் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் கட்சியின் உண்மையான நிர்வாகிகள்.
சசிகலாவிற்கு உயர் பதவியை கொடுத்து அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.
டெல்டா செல்வாக்கையும் மீட்டு எடுக்கவும், பெண்கள் வாக்குகளை மீண்டும் பெறவும் சசிகலாதான் சரியான சாய்ஸ்ஸாக இருப்பார் என்று டாப் லீடர்கள் இபிஎஸ் – ஓபிஎஸ்ஸிடம் அறிவுரை வழங்கி உள்ளதாக தெரிகிறது.