வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் கோவையிலுள்ள பீளமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது கமலின் தீவிர ரசிகர் ஒருவர் கோவை பாஷையில் பேச சொன்னார். அதை பொருட்படுத்தாமல் கமல் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த ரசிகர் கேட்டுக்கொண்டே இருந்தார். அதில் கடுப்பான கமல்ஹாசன், “நான் ஒன்றும் இங்கு நடிக்க வரவில்லை, நடிப்பதற்கான அரங்கு வேறு இடத்தில் உள்ளது. அதை அங்கு சென்று பாருங்கள். நான் இங்கு வேட்பாளராக வந்துள்ளேன், ஆடவோ பாடவோ சொல்லவேண்டாம்” என்று காட்டமாக பேசியுள்ளார்.
இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இன்னும் சிலரோ கமல் பேசியது சரி தான், வேட்பாளராக வந்தவரை ஏன் இன்னும் சினிமா நடிகராக பார்க்கவேண்டும். அவருடைய தீவிர ரசிகராக இருந்தாலும் சரியாக பேசியுள்ளார் என்றனர்.