தேமுதிக கட்சியின் துணைச்செயலாளருமான எ.கே.சுதீஸுக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல் தற்போது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடக்க உள்ளதால் அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேமுதிக துணைச்செயலாளர் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் ஓட்டுகள் சேகரித்துவந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுதீஸ் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தற்போது மிக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.