உங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை எரோபிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.
       மொபைல் போனை உங்கள் குழந்தைகளிடம் கொடுக்காதீங்க….இதனால் பல விளைவுகளை சந்திப்பீர்கள். உங்கள் குழந்தை மொபைல் பார்ப்பதால் மனதளவிலும் உடளவிலும் பலவீனமாக இருப்பார்கள். சிந்திக்கும் ஆற்றல் முற்றிலும் இல்லாமல் போகும். பெற்றோர்களிடம் பேசுவது குறைந்து போகும். மிக விரைவில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். தினம் அறை மணி நேரம் மொபைல் பார்த்தால் கூட குழந்தைகளுக்கு கண்களில் புற்று நோய் தாக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.
 பெற்றோர்களின் கவனத்திற்கு:
        நம் குழந்தைகள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தில்,புதிய கற்பித்தல் முறைகளுக்காக ‘smart phone’ பயன் படுத்துகின்றனர்.
        எனவே ,பிள்ளைகள் தவறுதலாக பார்க்க கூடாத வீடியோவையோ அல்லது வேறு ஏதேனும் வயதுக்கு மீறிய விஷயங்களையோ பார்க்காமலிருக்க நமது செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.
       உங்களுடைய ‘smart phone’ ->play Store சென்று ‘settings’-> parent control’ option ஐ ,’on’ செய்யவும்.
      அதன் கீழே உள்ள ‘Apps and games’ ஐ கிளிக் செய்து ’12+ டிக் செய்யவும்.
      அடுத்ததாக ‘films’ ஐ கிளிக் செய்து ‘U’ என்பதை டிக் செய்யவும்.
      அதேபோல் ‘You Tube’setting சில் ‘Restriction mode’ ‘on’ செய்யவும்.

By sowmiya