என்னுடைய செல்போனில் பேட்டரி குறைவாக உள்ளது, எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று தெரியவில்லை! இது நாம் அனைவர்க்கும் அவ்வப்போது வரும் பிரச்சனை. இப்பிரச்னைக்கு இதோ சில குறிப்புகள்.

  • போன் வைப்ரேஷன்மோடில் இருக்கும் பொது சார்ஜ் அதிகமாக செலவாகிறது. முதலில் வைப்ரேஷன் மோடியிலிருந்து நார்மல் மோடிற்கு மாற்ற வேண்டும்.
  • வால்பேப்பர், தீம்ஸ் போன்றவற்றிற்கு பதிலாக பிளைன் கருப்பு நிற வால்பேப்பர் பயன்படுத்துவதன் மூலம் சார்ஜ் செலவாவது குறைகிறது.
  • தேவை இல்லாத நேரங்களில் மொபைல் டேட்டா, வைபை, ப்ளூடூத், ஜிபிஸ் போன்றவற்றை ஆப் செய்து வைத்துருங்கள்.
  • கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன் செயல்பாட்டை அதிகரிக்க அவ்வப்போது இயங்குதளத்துக்கான அப்டேட்களை வெளியிடும். அவைகளை தவறாமல் அப்டேட் செய்வதால் செயலிகள் மூலம் பயன்படுத்தப்படும் பேட்டரியின் அளவு குறைவாகவேய இருக்கும்.
  • ஸ்மார்ட் போன்களில் ஏரோபிளான் மோட் என்ற ஆப்ஷன் உள்ளது. போன் ஏரோபிளான் மோடில் இருக்கும் பொது, உங்கள் வெளியுலகத் தொடர்பை மட்டுமல்ல; வீடியோ போன்ற மல்டி மீடியா ஆப்ஸ்களுக்குத் தேவையான பேட்டரி சார்ஜை அதிக நேரம் அளிக்கவல்லது. நீங்கள் நெட்ஒர்க் சரியாக கிடைக்காத இடங்களில் போனை ஏரோபிளான் மோடிற்கு மாற்றுவதால் பேட்டரி குறையாமல் இருக்கும்.

By ADMIN