ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தி.முக கட்சி பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் கோரிக்கையோடு வாழ்த்து தெரிவித்திருந்ததற்கு ஸ்டாலின் அருமையாக பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் 159 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.

அந்த வகையில், பிரதமர் மோடி, விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, வேண்டும் என்பது போன்ற கோரிக்கையோடு தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், இசைப்புயல் ஆஸ்கார் விருது அழகான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும்’ என்று வேறு லெவல் பதிலளித்துள்ளார். இதற்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By ADMIN