தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும்பாலான இடங்களில் 3-வது இடத்தினை பிடித்தது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, துறையூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய 9 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தினை பிடித்துள்ளது.

இந்த 9 தொகுதிகளிலும் மொத்தம் 17 லட்சத்து 40 ஆயிரத்து 830 வாக்குகள் பதிவாகின. இதில் நாம் தமிழர் கட்சி 1 லட்சத்து 41 ஆயிரத்து 189 வாக்குகள் பெற்றன.

அந்த கட்சி படிப்படியான வளர்ச்சியை திருச்சி மாவட்டத்தில் பெற்று வருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மேற்கண்ட 9 தொகுதிளிலும் தனித்து நின்று 22 ஆயிரத்து 613 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் 95 ஆயிரத்து 446 வாக்குகள் பெற்று 5.91 சதவீதம் பெற்றுள்ளது.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் 8.11 சதவீதத்தை எட்டி பிடித்துள்ளது. மணப்பாறை தொகுதியில் அதிகபட்சமாக அக்கட்சியின் வேட்பாளர் பி.கனிமொழி 19 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்றார்

மற்ற 8 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு….

திருச்சி கிழக்கு (ஆர். பிரபு)-14,312
ஸ்ரீரங்கம் (செல்வரதி) -17,911
திருவெறும்பூர் (சோழ சூரன்)-15,719
லால்குடி (மலர் தமிழ் பிரபா)-16248
முசிறி (ஸ்ரீதேவி இளங்கோ வன்)-14,311
துறையூர் (தனி) (தமிழ் செல்வி)-13,158
திருச்சி மேற்கு (வினோத்)- 15,637
மண்ணச்சநல்லூர் (டாக்டர் கிருஷ்ணசாமி)- 14,443
நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டத்தில் வாங்கிய வாக்குகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சியினரை சிந்திக்க வைத்துள்ளது.

தொடர்ச்சியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை பெற்று வருவது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By ADMIN