இந்தியாவில் கொரோனாவின் 2ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேலானோர் கொரோனாவால் பாதிப்பு அடைகின்றனர்.
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கொரொனா தடுப்புப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.