மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர் பகுதியில் தபஸ் என்ற பெண் தன்னுடைய கணவர் அமீருடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அமீருக்கு மராட்டிய மாநிலத்திற்கு வேலை மாற்றல் வந்து அங்கு அவர் மட்டும் சென்றார் .அப்போது தனியாக இருந்த தபஸுக்கு இம்ரான் என்ற வாலிபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .
அப்போது கணவர் வெளியூருக்கு சென்று விட்டதால் அவர்கள் காதல் செழித்து வளர்ந்தது .அப்போது இருவரும் கணவனுக்கு தெரியாமல் ஜாலியாக இருந்தார்கள் .இதற்கிடையே அந்த இம்ரான் வேலை செய்யும் மராட்டியத்தில் கொரானா பரவியதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.அதனால் அங்கு அமீர் வேலை செய்யும் ஆபீஸ் மூடப்பட்டது .அதனால் மீண்டும் அமீர் அவரின் ஊருக்கு மனைவியை பார்க்க வந்தார் .அப்போது அந்த மனைவிக்கு இம்ரான் என்ற வாலிபரோடு ஏற்பட்ட காதல் தெரிந்தது .அதனால் அவர் மனைவியை கண்டித்தார் .
அதன் பிறகு அந்த பெண் கூகுளில் கணவனை கொலை செய்வது எப்படி என்று தேடினார் .அதன் மூலம் அவரின் காதலனோடு சேர்ந்து அந்த கணவர் அமீருக்கு ஆஸ்துமா மருந்தில் விஷம் கலந்து கொடுத்தனர் .பிறகு தபஸும் இர்பானும் , தாவணியைப் பயன்படுத்தி அமீரின் கைகளையும் கால்களையும் கட்டினர். இதற்குப் பிறகு, அவர் இறக்கும் வரை இர்பான் பலமுறை அமீரை சுத்தியலால் தாக்கினார்..பின்னர் போலீசுக்கு இந்த கொலை விஷயம் தெரிந்து அந்த மனைவி தபசையும் அவரின் காதலணையும் கைது செய்தனர் .