இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வாழ்ந்துவந்த உலகின் மிகப்பெரிய குடும்பத் தலைவரான சியோனா சானா தனது 76 வயதில் காலமானார். 38 மனைவிகள் 89 பிள்ளைகள் 36 பேரக்குழந்தைகள் உள்ளதால், உலகிலேயே மிகப் பெரிய குடும்பமாக அறியப்பட்டு வந்தார்.
நீரிழிவு உயர் அழுத்தத்துடன் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் இயக்குனர் லாரன் துலுவங்கா மூலம் அவர் வாழ்ந்த ‘பக்கமா’ கிராமத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரின் நிலை மோசமடைந்ததன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சியோனா சானாவின் வாரிசுகள் அனைவரும் 100 அறைகள் கொண்ட நான்கு அடுக்கு மாடியில் வசித்து வந்தனர். தனது முதலாவது மனைவியை திருமணம் செய்து கொண்டபோது சியோனா சானாவின் வயது பதினேழு அப்போது அந்தப் பெண் இவரை விட மூன்று வயது மூத்தவராக இருந்தார்.
உலகின் மிகப் பெரிய குடும்பமாக அறியப்படும் இவரது குடும்பத்தினர் காலப்பகுதியில் மிசோரம் மாநிலம் குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகவும் மாறியதால், இவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதி சுற்றுலாவாசிகள் இடையேயும், உள்ளூர் மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது. சியோனா சானாவின் மறைவுக்கு மாநில முதல்வர் ஜோரம் தாங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.