கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்றும், இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும், முன்பதிவின்போது மத்திய அரசு வழங்கியுள்ள தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்பது விதியாகும்.

இதுதவிரவிமான நிலையத்துக்குள் செல்லும்பொது தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் இண்டிகோ கூறியுள்ளது. அதேசமயம் இருக்கைகளின் தேவையை பொறுத்தே தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

By ADMIN