தாய்லாந்தில் போலீஸ்காரர் வீட்டிலேயே திருடிவிட்டு அவர் வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்.
தாய்லாந்தில் நாட்டில் போலீஸ் வேலையில் பணிபுரிந்து வரும் ஒருவர் வீட்டிற்குள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு திருடன் திருட சென்றுள்ளான்.
அந்த வீட்டு காவலர் நைட் டூட்டி பணிக்கு சென்றிருந்த நேரம் அந்த திருடன் உள்ள புகுந்து பொருட்களை எல்லாம் மூட்டையாக கட்டியுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்த அறையில் ஏசியை போட்டுவிட்டு படுத்து தூங்கி உள்ளான்
அதன் பின் பனி முடிந்து திரும்பிய காவலர் திருடன் சொகுசாய் படுத்து உறங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் தனது போலீஸ் நண்பர்களை அழைத்து திருடனை பிடித்து கைது செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.