நடிகர் அரவிந்த் சாமி நடித்து 1999ல் ரிலீஸ் ஆன என் சுவாசக்காற்றே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிக்கர்.

இதன் பிறகு நடிகர் விஜய்ய, பிரசாந் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின்னர் இஷா கோப்பிகர் டிம்பி நராங் என்பவரை திருமணம் செய்து செட்டிலானார்.

இதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்த இஷா பல படங்களில் நடித்தார் . தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படமான அயலான் படத்தில் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையேயும் இணையத்திலும் வைரலானதை தொடர்ந்து இவர் வெளியிட்ட வீடியோ டிவிட்டர் பக்கத்தில் 80 ஆயிரம் பார்வையாளர்களை பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது.

By ADMIN