2022-2023 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறைசெயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைசந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசியஅவர்,

‘பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்
அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு
திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை
ஊக்குவிக்கவே மாதந்தோறும் ரூ.1000
உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நிதி
நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறை
குறைக்கப்பட்டுள்ளது;

வருவாய் பற்றாக்குறையை
மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வரி வருவாய் 17%-க்கும் அதிகமாக
இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ஆயிரம்
கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம்கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட 7-8% கூடுதல் வருவாய் கிடைக்கும். வரும் ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

By ADMIN