உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. அத்ந தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி
தீர்மானத்தை முறியடித்தது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்த பின்னரும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த
அணுசக்தி நாடுகளில் ஒன்றாகவே திகழ்கிறது. பல்வேறு அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அணு ஆயுதப் போரையே குழப்பமான வரிகளில் புடின் சுட்டிக்காட்டி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
விளாதிமிர் புடின் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ அல்லது பிற நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால்
அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது என்கிற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டல் அமைந்து இருப்பதாக சொல்லப்படுவது
உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.