அஜித் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வரும் வலிமை திரைப்படம் தற்போது பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

வலிமை திரைப்படம் வெளியான முதல் நாளே பல்வேறு திரைப்படங்களில் கலவரங்களும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து திரைப்படத்தை பற்றி பல்வேறு தரப்பினரும் ரிவ்யூ கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி தன்னுடைய தோழி சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் நடித்திருப்பதால் அவரோடு படத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். செய்தியாளர் ஒருவர் திரைப்படத்தை பற்றி ஸ்ரீநிதி இடம் கேள்விகளை கேட்டு இருக்கின்றனர்.

அதற்கு ஸ்ரீநிதி வலிமை திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் கொதித்தெழுந்து ஸ்ரீநிதிக்கு எதிராக கருத்துக்களை அனுப்பி வருகின்றனர். அதில் பலர் ஸ்ரீநிதி விஜய் ரசிகையாக இருக்கும். அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்கிறார் என்று கோபத்தோடு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்களாம்.

அந்த போஸ்ட்டில் கூட ரசிகர்கள் பலர் இவரை கலாய்த்து தள்ளி இருந்தனர். இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்று பற்றியும், தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பும் ரசிகர்களுக்கு இனி இந்த மாதிரி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியும் ஸ்ரீநிதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதற்கும் பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதில்களாக அனுப்பி வருகிறார்கள். இதுதான் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வரும் வீடியோவாக இருந்து வருகிறது.

By ADMIN