மும்பையில் வசிக்கும் ஹசம் ரஹிஸ் குரேஷி என்ற 33 வயது நபர் , திருடப்பட்ட செல்போன்களை வாங்கி அதை , பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கும் கடத்தினார். இப்போது அவர் மும்பையில் கைது செய்யப்பட்டபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் குரேஷி கடந்த சில மாதங்களில் குறைந்தது 5,000 செல்போன்களை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார் . மேலும் குரேஷி டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொடர்புகளிலிருந்து ,திருடப்பட்ட செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் டெல்லியில் உள்ள ஒரு மொபைல் ஷோரூமில் ஜியாவுதீன் இமாம், முகமது அலீம், அஜய் மற்றும் சிவ்குமார் ஆகியோர் பல போன்களை கொள்ளையடித்தனர் . அவர்களில் ஒருவரை போலீஸ் கைது செய்ததில் அவர் மூலம் கிடைத்த துப்பின் மூலம் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அலீமின் வங்கிக் கணக்கை போலீசார் ஸ்கேன் செய்தனர்.அதில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ளவர்களிடமிருந்து பணம் வந்துள்ளதை கண்டுபிடித்தனர் . அதில் குரேஷி அலீமின் கணக்கில் ரூ .30 லட்சத்தையும் டெபாசிட் செய்ததையும் ,அலீம் திருடப்பட்ட தொலைபேசிகளை 60 சதவீத தள்ளுபடியில் வாங்கி பின்னர் குரேஷிக்கு அதிக விலைக்கு விற்றதையும் போலீசார் கண்டுபிடித்து விசாரித்து வருகிறார்கள்

By ADMIN