கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் அனிதா (32) என்பதும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனையில் அனிதா 6 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் அனிதாவின் ஆண் நண்பர் பிரபீஷ் மற்றும் அவரின் மற்றொரு காதலியான ரஜானி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிசார் கூறுகையில், அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சில காலத்துக்கு முன்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அனிதாவுக்கு பிரபீஷுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்ப்பமான அனிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் தான் ரஜானி என்ற இன்னொரு பெண்ணை பிரபீஷ் காதலிக்க தொடங்கினார்.

இதையடுத்து கடந்த 9ஆம் திகதி ரஜானி வீட்டுக்கு வருமாறு அனிதாவிடம் பிரபீஷ் கூறியுள்ளார்.

அங்கு அனிதாவும், பிரபீஷும் உறவு கொண்டிருந்த போது திடீரென பிரபீஷும், ரஜானியும் அனிதாவின் கழுத்தை நெரித்து சேர்ந்து கொன்றுள்ளார்.

பின்னர் அனிதாவை தூக்கி தண்ணீர் நிறைந்த உப்பங்கழியில் இருவரும் சேர்ந்து போட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரபீஷுக்கு 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

By ADMIN