தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிந்து பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் முக்கியமாக குடிமகன்களில் பெரும் எதிர்பார்பான மது கடையும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டது.
குடிமகன்கள் மதுவை வாங்க அலைமோதி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குடலூருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இதன் மதிப்பு சுமார் 2000 ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் தெரிவித்துள்ளனர். எலிகள் ஒயின்களை ருசி பார்த்தது கூடலூர் பகுதியில் பெறும் பேசு பொருளாக உள்ளது.
கூடலூர் பகுதியில் தளர்வுகள் அறிவித்த நிலையில் ஆட்டோ ஓடத்தொடங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.