பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரவீனா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார்.

அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார்(33) , காவர் பிரவீனாவை திடீரென தடுத்து நிறுத்தி கீழே தள்ளி கன்னத்தில் கடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

தனக்கு நேர்ந்த கொடுமையை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் சென்று புகார் அளித்தனர். இதை கேள்விப்பட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வழக்கில் காவலர் சிவக்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

நாகையில் காவலரே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

By venkat