இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் கிறிஸ்டி பிரவுன். 32 வயதுஉடைய இவருக்கு வித்யாசமான பிரச்சனை ஒன்று உள்ளது. அபூர்வ வகையான மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ, பயமோ அல்லது கவர்ச்சியாக எதுவாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.

குறிப்பாக கிறிஸ்டி வெளியே செல்லும் போது கவர்ச்சியான ஒரு ஆணை பார்க்கிறார் என்றால் அடுத்த நொடியே, அதே இடத்தில் அவர் மயங்கி விழும் விபரீதம் நடந்துள்ளது.

இதனால் இவர் வெளியே செல்வது இல்லையாம். மிகவும் அவசியம் என்ற காரணத்திற்காக வெளியே சென்றால், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையைக் குனிந்தவாறே தான் கிறிஸ்டி செல்வது வழக்கம்.

இதுகுறித்து சொன்னா அவர், இந்த பிரச்சனை எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது. நான் மற்றவர்கள் போல் வெளியில் நடமாட முடியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் ஒரு நன்மையும் உள்ளது. யாராவது என்னிடம் சண்டை போட்டால், நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மயங்கி விழுந்து விடுவேன். அந்த சண்டையும் நின்று விடும்” என கிறிஸ்டி வேடிக்கையாகக் கூறியுள்ளார்

By ADMIN