தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இஸ்லாமியர் ஒருவர் தன் கடையில் வேலை பார்த்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மகளாக வளர்த்து வந்ததுடன்,
தன் சொந்த செலவில் நகை,சீர்வரிசை பொருள்கள் வாங்கிக் கொடுத்து கோயில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய செருப்பு கடையில் பிரியங்கா என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பா இறந்து விட பிரியங்காவின் அம்மாவும் அவரை கவனிக்க தவறிவிட்டார்.
இதையடுத்து கடையில் வேலை பார்த்து வந்த பிரியங்காவை சொந்த மகளாக பாவித்து பாதுகாப்பாக கவனித்து வந்தார் ராஜா முஹம்மது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரான ராஜா முஹம்மது இந்து பெண்ணான பிரியங்கா – விஜயகுமார் திருமணத்தை ஒரத்நாட்டில் உள்ள விசாலாட்சி அம்மன் கோயிலில் தன் குடும்பத்தினருடன் சென்று தலைமை வகித்து இந்து முறைப்படியே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்த தகவல் வெளியே தெரிந்து பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியதுடன் மத நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு என இதனை உதாரணமாக கூறி சமூக ஆர்வலர்கள் தொடங்கி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.