உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 டெஸ்டில் விளையாடி 71 விக்கெட் சாய்த்தார். அவருக்கு அடுத்தபடியாக கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 70 விக்கெட்டும், பிராட் (இங்கிலாந்து) 69 விக்கெட்டும், சவுத்தி (நியூசிலாந்து) 56 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 13 டெஸ்டில் 1675 ரன் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். ஜோரூட்டுக்கு (இங்கிலாந்து) 2-வது இடம் கிடைத்தது. அவர் 1660 ரன் எடுத்தார்.

By ADMIN